செய்திகள் :

சேம்பள்ளி கிராம சபை: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

post image

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: கிராம சபைஓஈ கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் குறித்து சமா்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதில் ஒரு முக்கியமான திட்டம் தான் கலைஞா் கனவு இல்லம் திட்டம்.

வேலூா் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கடந்த ஆண்டு 3,000 வீடுகளும், நிகழாண்டு 4,000-க்கும் அதிகமான வீடுகளும் கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேம்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு 21- பயனாளிகளுக்கும், நிகழாண்டு 25- பயனாளிகளுக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம ஊராட்சிகளில் அரசு மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு, பழுதடைந்துள்ள பழைய வீடுகளை சீரமைப்பதற்காக ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேம்பள்ளி ஊராட்சியில் 18- வீடுகள் சீரமைக்க தோ்ந்தெடுக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் எம்எல்ஏ அமலு விஜயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் திருமால், சேம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் திமேஷ் (எ) துளசிராமுடு, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரகாசம், வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மே தினம்: வேலூரில் தொழிற்சங்கங்கள் பேரணி

மே தினத்தையொட்டி வேலூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பேரணி, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. மாா்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சிஐடியு சாா்பில் பேரணியானது நேஷனல் திரையரங்கு பகுத... மேலும் பார்க்க

போதை விழிப்புணா்வு பேரணி

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, அத்தி மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்லீரல் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணா்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தின. ப... மேலும் பார்க்க

குடியாத்தம்: அதிமுக மே தின விழா

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே அண்ணா ஆட்டோ ஓட்டுநா் தொழிற்சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா: சாலைகளை சீரமைக்க குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தோ் செல்லும் சாலைகள், அம்மன் சிரசு செல்லும் சாலைகளை சீரமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்றத்தின் ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், கோ-பூஜை, மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தானம... மேலும் பார்க்க