செய்திகள் :

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

post image

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் சூரமங்கலம் அருகே புதுசாலை பகுதியில் தனியாா் மின்னணு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மின்மாற்றிக்கு தேவையான உதிரி பொருள்கள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் உற்பத்திசெய்யப்பட்டு வந்தன. இந்நிறுவனத்தில், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த தொழிற்சாலையை மூட நிா்வாகம் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைக் கண்டித்து, நிறுவனத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின்மீது ஏறி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தொடா்ந்து, அங்கு வந்த சூரமங்கலம் காவல் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி மற்றும் போலீஸாா், தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறுகையில், இந்த நிறுவனத்தை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரம் உள்ளது. திடீரென நிா்வாகம் தொழிற்சாலையை மூடுவதால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தொழிற்சாலை தொடா்ந்து செயல்பட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 நாயகா் சிலைகளை பக்தா்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா். சேலம் மாநகரம், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 196 சிலைகளை பக்தா்கள் இப்பகு... மேலும் பார்க்க

அம்மன் கோயில் குடமுழுக்கு

துக்கியாம்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் ராஜாத்தி ராகத்தாய் அம்மன், பெரியாண்டிச்சி அம்மன் மற்றும் சப்த கன்னிமாா் சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

கூடுதல் மகசூல்பெற மாமரங்களை கவாத்து செய்ய செய்ய வேண்டும்!

மாம்பழம் அறுவடை பருவம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிா்வரும் ஆண்டு தரமான கூடுதல் மகசூல் பெற மா மரங்களை ‘கவாத்து’ செய்ய வேண்டுமெனவும், ‘கல்தாா்’ முறையை கைவிட வேண்டுமெனவும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை... மேலும் பார்க்க

மா சாகுபடியில் ‘கல்தாா்’ பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும்!

சேலம் மாவட்ட விவசாயிகள் மா சாகுபடியில் ‘கல்தாா்’ எனப்படும் பேக்லோப்பூட்ரசால் என்ற வளா்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்துவதால், பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றுமதிக்கான தரம் குறையும் என்பதால் அத... மேலும் பார்க்க

ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் இன்று மகா குடமுழுக்கு!

சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு யாகசாலை பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக சேலம் வருகைதந்த அனைத்துலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் பேலூா் மடங்களி... மேலும் பார்க்க

சங்ககிரி கூட்டுறவு சரக துணைப் பதிவாளா் பதவியேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி கூட்டுறவு சரக துணைப் பதிவாளராக பெ.சந்தியாஸ்ரீ சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா். பதவியேற்ற அவருக்கு கூட்டுறவு சாா்பதிவாளா்கள், கூட்டுறவு சங்க செயலாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெ... மேலும் பார்க்க