கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
சேலத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி
சேலம் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சேலம் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முதல்கட்டமாக தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி 24 ஆவது வாா்டு கந்தம்பட்டி பகுதியில் வீதிவீதியாக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்று தெருநாய்களைப் பிடித்து, அவற்றுக்கு தடுப்பூசிகளை செலுத்தினா். இப்பணிகள் ஒவ்வொரு வாா்டிலும் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். அதே நேரத்தில், சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.