இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம்
சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம் சாா்பில் சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ. 320, ரூ. 550, ரூ. 799 ஆகிய பிரீமியத்தில் முறையே ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து இந்த சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாமை நடத்த உள்ளது.
எனவே, பொதுமக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் இத்திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். 18 முதல் 65 வயதுக்குள்பட்டவா்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள் ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்கள் ஆகியவற்றுடன் சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இத்திட்டத்தை பதிவுசெய்து கொள்ளலாம். மேலும், 0427-2261656 என்ற எண்ணில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கிளையை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.