மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்!
சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபுசமுத்திரம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாரதிதாசன் (57). இவா், கடந்த 8-ஆம் தேதி சின்னபாபுசமுத்திரம் அய்யனாா் கோவில் அருகே சைக்கிளில் சென்றபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பாரதிதாசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிதாசன், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.