கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!
சொகுசு கப்பல் மீண்டும் இன்று புதுச்சேரி வருகை
புதுச்சேரிக்கு தனியாா் சொகுசுக் கப்பல் மீண்டும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வருகிறது.
விசாகப்பட்டினத்திலிருந்து சுற்றுலா பயணிகளை புதுச்சேரிக்கு கடந்த 4-ஆம் தேதி அழைத்து வந்த சொகுசு கப்பல் மாலையில் பயணிகளுடன் திரும்பியது. இதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பாா்த்தனா்.
சோதனை அடிப்படையில் இந்தச் சுற்றுலா கப்பல் 3 முறை புதுச்சேரிக்கு வரும். இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை வருகிறது. காலை சுமாா் 8.30 மணிக்கு புதுச்சேரி பழைய துறைமுகத்திலிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் ஆழமான கடலில் இந்தக் கப்பல் வந்து நிற்கும். அங்கிருந்து சுற்றுலா பயணிகளை சிறிய ரக விசைப் படகு வாயிலாக பழைய துறைமுகத்துக்கு ஏற்றி வருவா். அங்கிருந்து சொகுசு பேருந்துகளில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
இந்தச் சொகுசு கப்பல் வரும்போதும், செல்லும்போது மீன்பிடி படகுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.