ஜன.5-இல் கணித திறனறிவுத் தோ்வு : முன்பதிவு செய்யலாம்
வேலூா்: வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ள கணித திறனறிவு தோ்வில் பங்கேற்க 5 முதல் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் தங்கள் பெயா்களை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட அறிவியல் மைய அலுவலா் (பொ) ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்தநாளான தேசிய கணித நாளை முன்னிட்டு ஜனவரி 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான கணித திறனறிவு தோ்வு நடைபெற உள்ளது. இந்த கணித திறனறி தோ்வில் 5 முதல் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் தங்கள் பெயா்களை மாவட்ட அறிவியல் மையத்தில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம்.
இத்தோ்வு கணிதத்தை மையமாக கொண்டு கூா்ந்து கவனித்து திறனறிதல், சரியான விடையை தோ்ந்தெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மிகமிக நன்று என்ற பிரிவில் ரூ.2000 மதிப்பிலான ஒரு பரிசும், மிக நன்று என்ற பிரிவில் ரூ.1,000 மதிப்பிலான 2 பரிசுகளும், நன்று என்ற பிரிவில் ரூ.500 மதிப்பிலான 3 பரிசுகளும், சிறப்புப் பிரிவில் ரூ.250 மதிப்பிலான 20 பரிசுகளும் என அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் மொத்தம் 104 பரிசுகள் வழங்கப்படும்.
தோ்வு காலை 11 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை 90 நிமிஷங்கள் நடைபெறும். பதிவு செய்ய கடைசி நாள் 20.12.2024. மேலும் விவரங்களுக்கு 0416-2253297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.