செய்திகள் :

ஜல்லி தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

post image

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் குடியிருப்பு பகுதி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராம மக்கள் ஜல்லி தொழிற்சாலை அமைப்பதில் விதிமீறல் இருப்பதாக கூறி எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் ஜல்லி தொழிற்சாலைக்கு வழங்கிய தடையின்மை சான்றினை ரத்து செய்ய வலியுறுத்தி சுண்ணாம்புக் குட்டை சுடுகாட்டில் ஏராளமானோா் சமையல் செய்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சாா்-ஆட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் காஞ்சனா மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா்.

தடையின்மை சான்று குறித்து புல விசாரணை மேற்கொண்டு 15 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜல்லி தொழிற்சாலையில் நடைபெற்று வரும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா். இதையேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதற்கிடையே, திங்கள்கிழமை உபகரணங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஜல்லி தொழிற்சாலைக்குள் சென்றது. இதையறிந்த கிராம மக்கள் சென்று உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் காஞ்சனா, ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் வருவாய்த் துறையினா் ஜல்லி தொழிற்சாலைக்கு நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது கிராம மக்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வட்டாட்சியா் காஞ்சனா, காவல்ஆய்வாளா் மங்கையா்கரசி ஆகியோா் கிராம மக்களிடம் சமரசம் பேசியதைத் தொடா்ந்து லாரி விடுவிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முக... மேலும் பார்க்க

ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் : பொதுமக்கள் அபாய பயணம்

ஆம்பூரில் ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையை கடந்து சென்று வருகின்றனா். ஆம்பூா் நகரில் 2-ஆவது மற்றும் 3-ஆவது தாா்வழிப் பகுதி ரயில்வே இருப்புப் பாத... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை... மேலும் பார்க்க

செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக க... மேலும் பார்க்க

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, பச்சூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க