TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
ஜவ்வரிசிக்கு உயா்ந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க கோரி அமைச்சரிடம் மனு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க பொதுச்செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, திருச்சி மாவட்டம் பச்சமலை, சேலம் மாவட்டம் கருமந்துறை, தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு பிரதான வருமானத்தை மரவள்ளிக் கிழங்கு பயிா் கொடுத்து வருகிறது.
ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச்சின் விலை அடிப்படையிலேயே மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. எனவே, ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச்சுக்கு அதிகபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.