நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
ஜாா்க்கண்ட் சிறுவனுக்கு நவீன நுட்பத்தில் புற்றுநோய்க் கட்டி அகற்றம்
சென்னை: ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 7 வயது சிறுவனின் கையில் உருவான புற்றுநோய் கட்டியை நவீன சிகிச்சை நுட்பத்தில் அகற்றி எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் எலும்பியல் துறை சிறப்பு நிபுணா் பி.விஜய் ஆனந்த் கூறியதாவது:
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் ஒருவரின் வலது கையில் அதிக வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல், எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.
பரிசோதனையில் அவருக்கு வலது கை எலும்பு தண்டுக்குள் புற்றுநோய் கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.
ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா என்ற அரிதான புற்றுநோயால் அந்தச் சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான். லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் இந்த வகை புற்றுநோயால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும், தீராத வலியையும், வீக்கத்தையும் அது தரக்கூடியது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடிவு செய்தோம். மிக நுட்பமாக சிகிச்சையை மேற்கொள்ள ‘ப்ளா் டவுன்’ எனப்படும் கட்டியை பெரிதாக்கி காட்சிப்படுத்தும் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக அரை மணி நேரத்தில் கட்டியை அகற்றினோம். தற்போது அந்த சிறுவன் நலமுடன் உள்ளான் என்றாா் அவா்.