செய்திகள் :

ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!

post image

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கார்ல்செனுக்கு முதல்முறையாக 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17,076) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆடைய மாற்றும்படி கூறியதற்கு கார்ல்சென் மறுத்துவிட்டதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

8ஆவது சுற்றில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஃபிடே அமைப்பு இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

ஆடைக் கட்டுப்பாடு ஃபிடே குழுவினரான தொழில்முறை வீரர்கள், அனுபவம் வாய்ந்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விதிமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எல்லா போட்டிகளுக்கு முன்பாகவும் இதுகுறித்து போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வீரர்களின் தங்கும் இடம் போட்டி நடைபெறும் இடத்துக்கு நடந்துசெல்லும் தூரத்திலே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்க ஏதுவாக இருக்க இந்தமாதிரியான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று, மாக்ன்ஸ் கார்ல்சென் தடைசெய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து வந்து விதிமுறைய மீறினார். அவரது உடையை மாற்றும்படி கூறியும் அவர் ஏற்கவில்லை என்பதால் 9ஆவது சுற்றில் பங்கேற்கவில்லை. இது அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். இதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

குட் பேட் அக்லி டப்பிங்கில் அஜித்!

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக டப்பிங் செய்து வருகிறார்.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அ... மேலும் பார்க்க

கோமா நிலையிலும் என் மகன் விஜய்யை மறக்கவில்லை: நாசர்

நடிகர் நாசர் தன் மகன் மற்றும் நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.இந்திய சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர். தமிழ், தெலுங்கு என ஆண்டிற்கு பல படங்களில் வ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: பணப்பெட்டியில் ஏமாற்றம்! ஜெஃப்ரியை ஆரத்தியுடன் வரவேற்ற மக்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜெஃப்ரியை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஒருவாரம் நீடித்திருந்தால் பணப் ... மேலும் பார்க்க

செளந்தர்யாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: முத்துக்குமரன்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். இதேபோன்று வி.ஜே. விஷாலுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜாக்குலினும், ராணவுக்கு வாக்கள... மேலும் பார்க்க

2024 - ரூ. 650 கோடி நஷ்டத்தைச் சந்தித்த மலையாளத் திரையுலகம்!

மலையாளத் திரையுலகில் சில வெற்றிப் படங்களைத் தவிர்த்து பெரும்பாலான படங்கள் இந்த ஆண்டு தோல்வியடைந்ததால் ரூ. 650 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் இந்... மேலும் பார்க்க

5 கோடி பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி பாடல்!

விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இ... மேலும் பார்க்க