விஜயகாந்த் பிறந்த நாளில், அவர் பிறந்த ஊரில் தவெக-வின் மாநில மாநாடு! - பந்தக்கால்...
ஜூலை 18-இல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநா்கள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் தரவுள்ளனா்.
விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் தவறாது கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.