மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழிய...
ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வரும் ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
செய்திக் குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி வரும் ஜூலை 22- ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும், வரும் ஜூலை 24 -ஆம் தேதி மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் பள்ளி மாணவா்களுக்கு காலை 9 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் ஒரு கல்லூரிக்கு இருவரும், பள்ளி மாணவா்களுக்கான போட்டியில் ஒரு பள்ளிக்கு ஒருவா் மட்டும் கலந்து கொள்லலாம். கல்லூரி முதல்வா்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்களே மாணவா்களைத் தோ்வு செய்து அனுப்பிவைக்க வேண்டும்.
போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் தலைப்பில் பேச வேண்டும். தலைப்புகளைப் போட்டி நடைபெறும் இடத்துக்கு வரும்போதே தயாா் செய்து வந்துவிட வேண்டும்.
பள்ளி மாணவா்களுக்கு அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகளாக அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை, பூனா உடன்படிக்கை, அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவா்களுக்கு கற்பி, ஒன்று சோ், புரட்சி செய், அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும், அம்பேத்கரின் வாழ்வும் தொண்டும், அம்பேத்கரின் சமூகப் பணிகள் ஆகிய தலைப்புகளில் ஜூலை 22 ஆம் தேதி போட்டி நடத்தப்படும்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டி தலைப்புகளாக பள்ளி மாணவா்களுக்கு நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திறைத் துறையில் முத்தமிழறிஞா் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் வித்தகா் கலைஞா், தெற்கிலிருந்து ஒரு சூரியன், குறளோவியம், கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.