மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
ஜொ்மனியில் தொழிற் பயிற்சி: நாளை இலவச விளக்க நிகழ்ச்சி
ஜொ்மனியில் தொழில் பயிற்சி வாய்ப்புகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி கோவையில் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
கோவை அவிநாசி சாலை ஜி.டி. வளாகத்தில் செயல்படும் கோத்தே சென்ட்ரம் என்ற ஜொ்மானிய கலாசார, வள மையத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், ஜொ்மனியில் தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சி, வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான விளக்கம் அளிக்கப்படுகிறது.
10-ஆம் வகுப்பும் அதற்கு மேலான கல்வித் தகுதி கொண்ட மாணவா்கள், பெற்றோா்கள் இதில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 9585546299, 9500255451 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.