கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மன...
ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!
புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
உஜாலா, பிரில், மார்கோ மற்றும் எக்ஸோ ஆகிய பிராண்டுகளை வைத்திருக்கும் ஜோதி லேப்ஸின் கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.78.15 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
மார்ச் காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து ஜோதி லேப்ஸின் வருவாய் 1 சதவிகிதம் அதிகரித்து ரூ.666.96 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.667 கோடியாக அதிகரித்துள்ளது.
மார்ச் காலாண்டில் ஜோதி லேப்ஸின் மொத்த செலவுகள் ரூ.571.23 கோடியாக இருந்தது. அதே வேளையில் மார்ச் காலாண்டில் அதன் மொத்த வருவாய் 1.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.682.44 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.672.96 கோடியாக இருந்தது.
மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஜோதி லேப்ஸின் நிகர லாபம் ரூ.370.38 கோடியாக இருந்தது, இதுவே அதன் முந்தைய ஆண்டு அதன் நிகர லாபம் ரூ.369.30 கோடியாக இருந்தது.
நிதியாண்டு 2025ல், ஜோதி லேப்ஸின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 3.26 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,902.56 கோடியாக இருந்தது.
ஜோதி லேப்ஸ் லிமிடெட்டின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் ரூ.350.20 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: விலை உயர்வு குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!