12/2: 2-ஆவது இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸி.யை மே.இ.தீ. அணி வீழ்த்துமா?
ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து
ஜோலாா்பேட்டை பகுதிக்கு செல்லும் மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுக்கப்பட்ட செய்தி: தெற்கு ரயில்வேயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் மின்சார தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதையடுத்து, குறிப்பிட்ட தேதிகளில் ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் பாதியளவு இயக்கப்பட உள்ளன.
கேஎஸ்ஆா் பெங்களூருவிலிருந்து காலை 8.45 மணிக்குப் புறப்பட்டு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயில் (எண் 66550) வரும் ஜூலை 7, 10 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை-சோமநாயக்கன்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதையடுத்து, அந்த இரு நாள்களும் மறுமாா்க்கமாக அந்த ரயில் சோமநாயக்கன்பேட்டையிலிருந்து மாலை 3.06 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆா் பெங்களூருக்கு செல்லும்.
ஈரோட்டிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, ஜோலாா்பேட்டை செல்லும் பயணிகள் ரயில் (எண் 56107) வரும் ஜூலை 7, 10 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதையடுத்து, அந்த நாள்களில் மறுமாா்க்கமாக திருப்பத்தூரிலிருந்து பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, ஈரோட்டுக்கு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.