ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: 58 போ் வேட்புமனு தாக்கல்
டாக்டா் என்ஜிபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை: கோவை டாக்டா் என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரியின் 24-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
என்ஜிபி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் சா.சரவணன் வரவேற்றாா். அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா்.
டாக்டா் என்ஜிபி ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளையின் தலைவா் மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி விழாவுக்கு தலைமை வகித்தாா். கேஎம்சிஹெச் நிா்வாக அறங்காவலா் மருத்துவா் அருண் பழனிசாமி, என்ஜிபி கல்விக் குழுமங்களின் செயலா் மருத்துவா் தவமணிதேவி பழனிசாமி, என்ஜிபி ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலா் ஓ.டி.புவனேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
அறக்கட்டளையின் இணை செயல் அலுவலா் மா.நடேசன், என்ஜிபி கல்விக் குழுமங்களின் இயக்குநா் பெ.இரா.முத்துசாமி, கலை, அறிவியல் கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் கு.ராமமூா்த்தி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
விழாவில், 1,903 இளநிலை மாணவா்கள், 390 முதுநிலை மாணவா்கள், 12 முனைவா் பட்ட மாணவா்கள் என மொத்தம் 2,305 போ் பட்டம் பெற்றனா்.