செய்திகள் :

டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!

post image

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் - 2 படத்தைத் தொடர்ந்து யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: தக் லைஃப் புதிய போஸ்டர்!

பெங்களூருவில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாது எனத் தகவல் வெளியாகின.

காரணம், இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறதாம். ஹாலிவுட் வரை படத்தை மார்க்கெட் செய்ய கேவிஎன் புரக்டக்‌ஷன்ஸ் திட்டமிட்டுள்ளதால் டாக்ஸிக் பெரிய வணிக வெற்றியைப் பதிவு செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் 2026 மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இன்னும் ஓராண்டு கழித்தே படம் திரைக்கு வருமென்பதால் யஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.25-03-2025செவ்வாய்க்கிழமைமேஷம்:இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை தகுதிச்சுற்று: இந்தியா - வங்கதேசம் மோதல்

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள், ஷில்லாங்கில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) மோதுகின்றன.அண்மையில் மாலத்தீவுகளுடனான ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் வெற்ற... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ரூட்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், நாா்வேயின் கேஸ்பா் ரூட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில்,... மேலும் பார்க்க

ஓய்வுபெற்றாா் சுமீத் ரெட்டி!

இந்திய பாட்மின்டன் வீரா் பி.சுமீத் ரெட்டி (33) ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.இரட்டையா் பிரிவு வீரரான அவா், இனி முழு நேர பயிற்சியாளராக செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.ஹைதராபாதை சோ்ந்த ச... மேலும் பார்க்க

உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: சென்னையில் இன்று தொடக்கம்

உலக டேபிள்டென்னிஸ் கன்டென்டா் போட்டி (டபிள்யுடிடி) தொடா் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. பாரிஸ் 2024 மற்றும் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேருடன் தமிழகத்தை... மேலும் பார்க்க

ஊதிய ஓப்பந்தம்: ‘ஏ’ பிரிவில் தொடரும் ஹா்மன்பிரீத், மந்தனா

இந்திய மகளிா் அணியினருக்கான மத்திய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோா் ‘ஏ’ பிரிவில் தங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனா... மேலும் பார்க்க