செய்திகள் :

டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

post image

கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார்.

கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதால், அதனைத் தடுக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவார். அவர்கள் எப்போது வந்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், இறையாண்மை கொண்ட நாடாக கனடாவுக்கான மரியாதை கிடைக்கும்வரையில் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கனடா அரசு அதனை மறுத்து வருகிறது. இதனிடையே, கனடா மீது அமெரிக்கா அதிகளவிலான வரி விதித்ததையொட்டி, அமெரிக்கா வர்த்தகப் போரை விரும்புவதாக பலரும் கூறினர்.

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி கடந்த மார்ச் 14 ஆம் தேதியில் பதவியேற்ற நிலையில், இதுவரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தொலைபேசியில்கூட தொடர்பு கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், தற்போதைய பிரதமர் மார்க் கார்னி குறித்து டிரம்ப் எதுவும் கூறவில்லை.

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’ என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமராக கடந்... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே க... மேலும் பார்க்க

சூடான்: தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்

சூடான் தலைநகா் காா்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் நபில் அப்துல்லா சனிக்கிழமை கூறியதாவது: காா்ட்டூம் நகரில் தொடா்ந்து முன்னேற்றம் கண்ட... மேலும் பார்க்க

செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்

லண்டன்: தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது. அந்த விமான நிலையத்துக்கு நெருக்கமாக உள்ள த... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?

வாஷிங்டன் : வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமை திரும்பப் பெறப்படுவதாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம... மேலும் பார்க்க

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளை(மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளிய... மேலும் பார்க்க