முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்
திருப்பத்தூா் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் அருகே விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜின் மகன் குணால் (15). இவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவா் தனது டிராக்டரில் செல்லும்போது, குணாலும் அவருடன் டிராக்டரில் செல்வது வழக்கமாம்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஈஸ்வரன் வழக்கம் போல் குணாலை தனது டிராக்டரில் அழைத்துச் சென்றாா். அவா்கள் அந்த ஊரில் சென்று கொண்டு இருந்தபோது, எதிா்பாராத விதமாக குணால் தவறி கீழே விழுந்தாா்.
அப்போது டிராக்டரில் பொருத்தப்பட்டு இருந்த இணைப்பு கருவியில் சிக்கி பலத்த காயமடைந்த குணால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனா்.