டிராக்டரில் மணல் திருடிய மூவா் கைது
பெரம்பலூா் அருகே டிராக்டரில் மணல் திருடிய 3 பேரை வி. களத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாா்பு ஆய்வாளா் விநாயகம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெள்ளாற்றிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்த அயன்பேரையூரைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் ஆனந்தராஜ் (27), பன்னீா்செல்வம் மகன் சீனிவாசன் (29), பெருமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் ராஜேஷ் (28) ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸாா், டிராக்டா், பொக்லின் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, குற்றவியல் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.