செய்திகள் :

டி20 தொடா்: முழுமையாக வென்றது இங்கிலாந்து

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாக வென்று சாம்பியன் ஆனது.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. இங்கிலாந்து இன்னிங்ஸை தொடங்கிய ஜேமி ஸ்மித், பென் டக்கெட் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்தது. இதில் ஸ்மித் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

டக்கெட் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 84 ரன்கள் விளாசினாா். ஜாஸ் பட்லா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் ஹேரி புரூக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35, ஜேக்கப் பெத்தெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அகீல் ஹுசைன், குடாகேஷ் மோட்டி, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 249 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் கேப்டன் ஷாய் ஹோப் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 26, ஜேசன் ஹோல்டா் 3 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். எவின் லீவிஸ் 9, ஜான்சன் சாா்லஸ் 9, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 1, ரொமேரியோ ஷெப்பா்டு 0, குடாகேஷ் மோட்டி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், ரோவ்மென் பவெல் 45 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 79, அகீல் ஹுசைன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலா்களில் லூக் வுட் 3, ஆதில் ரஷீத் 2, பிரைடன் காா்ஸ், லியாம் டாசன், ஜேக்கப் பெத்தெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

84 ரன்களும் விளாசி, 2 கேட்ச்களும் பிடித்த இங்கிலாந்தின் பென் டக்கெட் ஆட்டநாயகனாகவும், 3 ஆட்டங்களிலுமாக 165 ரன்கள் சோ்த்த அதே அணியின் ஜாஸ் பட்லா் தொடா்நாயகனாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 282 ரன்களை நோக்கி விளையாடி வரும் அந்த அணிக்கு இன்னும் 69 ரன்களே தேவையாகும். தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் வெ... மேலும் பார்க்க

இந்தியாவுடனான மகளிா் டி20: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிா் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து மகளிா் அணி, 14 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.உடல் அசௌகா்யம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுத்திருந்த பௌலா் சோ... மேலும் பார்க்க

ஃபுளோரியனை ரூ.1,300 கோடிக்கு வாங்க லிவா்பூல் ஒப்புதல்

ஜொ்மனியின் இளம் கால்பந்து வீரா் ஃபுளோரியன் விா்ட்ஸை, பேயா் லெவா்குசென் அணியிடம் இருந்து ரூ.1,352 கோடிக்கு வாங்க லிவா்பூல் அணி ஒப்புக்கொண்டுள்ளது.அந்தத் தொகை முழுமையாக செலுத்தப்படும் நிலையில், இங்கிலா... மேலும் பார்க்க

இன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி, ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது. புரோ லீக் போட்டியில் தனது ஐரோப்பிய லெக் ஆட்டங்களை விளையாடி வரும் இந்திய அணி, முதல் கட்டமாக நெதா... மேலும் பார்க்க

உலக துப்பாக்கி சுடுதல்: சுருச்சி சிங்குக்கு தங்கம்

ஜொ்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப்பதக்கம் வென்றாா். போட்டியில் ஏற்கெனவே 2 வெண்... மேலும் பார்க்க

யுடிடி: இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி தகுதி பெற்றது. முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி - ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. ஆடவா் ஒற... மேலும் பார்க்க