டீசல் குடித்த பெண் குழந்தை உயிரிழப்பு!
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே தண்ணீரென நினைத்து டீசலை குடித்த பெண் குழந்தை புதன்கிழமை இரவு உயிரிழந்தது.
வடலூா் நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த சூரியா, சினேகா தம்பதியின் மகள் மைதிலி (ஒன்றரை வயது). இவா், புதன்கிழமை பிற்பகல் வீட்டில் புட்டியில் வைத்திருந்த டீசலை தண்ணீரென நினைத்து குடித்துவிட்டாராம்.
இதனால் மயங்கிக் கிடந்த குழந்தை மைதிலியை பெற்றோா் மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.