டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம்: சமுத்திரகனி
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைப் சமுத்திரகனி பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
மே 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று (ஏப். 26) சென்னையில் நடைபெற்றது. இதில், சசிகுமார், விஜய் ஆண்டனி, சமுத்திரகனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய சமுத்திரகனி, “இந்தப் படத்தைப் பார்த்தபோது மிகவும் கனமாக இருந்தது. அன்பை, அறத்தை போதிக்கக்கூடிய திரைப்படமான டுரீஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம். படத்தின் கிளைமேக்ஸில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. சசிகுமாரைப் பார்த்து கையெடுத்து கும்பிட வேண்டும்போல் இருக்கிறது.
இப்படத்தை முன்பே பார்த்திருந்தால், நானும் ஏதாவது வேலை செய்திருப்பேன். இதுவரை யாருமே இப்படியொரு படத்தை எடுக்கவில்லை. சசிகுமாருக்கு சுப்ரமணியபுரம் அமைந்ததுபோல் எனக்கு நாடோடிகள் அமைந்ததுபோல் அபிஜனுக்கு டுரீஸ்ட் ஃபேமிலி.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கஞ்சா வைத்திருந்ததாக இயக்குநர் கலித் ரஹ்மான் கைது!