டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி - யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?
இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது.
இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது.
நெட்வொர்க் ஸ்டேட் கனவு
“Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
இணைய வழியில் ஒருங்கிணைத்து, ஒரு புதிய டெக் நாட்டை உருவாக்க பாலாஜி திட்டமிட்டு வருகிறார்.
தீவில் நடக்கும் நிகழ்வுகள்
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனரான நிக் பீட்டர்சன் இந்த திட்டத்தில் சேர்ந்து, தீவின் மெய்நிகர் சுற்றுப்பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். "ஆர்வத்தில் கட்டிவிட்டு, கைவிடப்பட்ட தீவு ஒரு ஸ்டார்ட்அப் சொசைட்டிக்கு மாறும்போது எப்படி இருக்கும்" என்று அவர் வீடியோவை தலைப்பிட்டு ஜிம், வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் நாளை அதிகாலையில் தொடங்குவது பற்றிய ஒரு பார்வையை அளித்தார்.
அந்த வீடியோவில் மாணவர்கள் அதிகாலை எழுந்து ஜிம் செஷன்களில் பங்கேற்று, பின்னர் வகுப்புகளில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
வித்தியாசமான முயற்சி
பாலாஜி ஸ்ரீநிவாசனின் இந்த திட்டம் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ஒரு புதிய வாழ்வுமுறை முயற்சியாகவும், வருங்காலத்தில் நாடுகள் உருவாகும் விதம் எப்படி மாறும் என்பதை சோதனை செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் தொழில்நுட்ப உலகில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்தலைமுறையினர்களும் தொழில்நுட்ப ஆர்வலர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யார் இந்த பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன்?
அமெரிக்காவின் பிரபல தொழில்முனைவோரும், கிரிப்டோகரன்சி நிபுணருமான பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன் மே 24, 1980 அன்று தமிழகத்தில் பிறந்து, நியூயார்க் ப்ளைன்வியூவில் வளர்ந்திருக்கிறார்.
இவர் தொழில்நுட்ப துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். பல நிறுவனங்களில் பணியாற்றிருக்கிறார்.
பாலாஜி ஸ்ரீனிவாசன், பரவலாக்கம், கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால சமூக அமைப்புகள் குறித்த தனது புதிய சிந்தனைகளை சமூக வலைதளங்களிலும், நேரடி உரையாடல்களிலும் பகிர்ந்து வருகிறார். The Network State என்ற அவரது புத்தகம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இவர் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.