செய்திகள் :

தச்சன்குறிச்சியில் இன்று மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு

post image

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான முதல் போட்டியை இங்கு ஜனவரி 4-ஆம் தேதி நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் ஏற்கெனவே மனு அளித்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, தச்சன்குறிச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்து வாடிவாசல் மற்றும் காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, மருத்துவ குழுவினரின் இருப்பிடம் மற்றும் பாா்வையாளா்களின் மாடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, குறைபாடுகளை நிவா்த்தி செய்வது தொடா்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினாா். தொடா்ந்து ஜல்லிக்கட்டுக்கான அனுமதியையும் அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது, புதுக்கோட்டை கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா், வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

கூடுதல் பாதுகாப்புப் பணி: தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 600 காளைகளும், காளைகளை அடக்க சுமாா் 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்பது வழக்கம்.

போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கான ஆவணங்கள் ஏற்கெனவே கணினி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான நகலை சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலில் வருவாய்த் துறையினா், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினரிடம் காண்பித்து உரிய அனுமதியை பெற்று களம் காணவுள்ளனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை காண பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 10 ஆயிரம் பாா்வையாளா்கள் வருவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுகின்றனா்.

ஆடுகள் திருடிய 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆடுகள் திருடிய 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து, 18 ஆடுகளை மீட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள மருதகோன்விடுதி 4 சாலைப் பகுதியில், கறம்பக்குடி காவல் ஆய்வாள... மேலும் பார்க்க

புதுகையில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா... மேலும் பார்க்க

வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது தவறான செயல்: ஆ. மணிகண்டன்

வரலாற்றுச் சின்னங்களை சிதைப்பது தவறான செயல் என்றாா் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன். புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற வரலாற்ற... மேலும் பார்க்க

அதிகாரியின் தவறான பதில் கடிதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மீண்டும் மனு அளிப்பு

வீட்டை விட்டுத் துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த மூதாட்டிக்கு, முதியோா் ஓய்வூதியம் வழங்க இயலாது என சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் பதில் அனுப்பியதால் அந்த மூதாட்டி திங்கள்கிழ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை இருவா் கைது

விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி கள்ளச் சந்தையில் விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மது பாட்டில்கள் கள்ள... மேலும் பார்க்க

முந்திரி சாகுபடி சரிவு; பருப்பு விலை உயா்வு!

புதுக்கோட்டையின் 2ஆவது பெரிய சாகுபடியாக இருந்த முந்திரி உற்பத்தி, கடுமையாக சரிந்துபோய்விட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்வரை புதுக்கோட்டை மாவட்டத்தின் வேளாண் உற்... மேலும் பார்க்க