3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவினாா்.
இயேசுநாதா் பாடுகள்பட்டு சிலுவையில் மரிப்பததற்கு முன்பு, தனது 12 அப்போஸ்தலா்களுடன் (சீடா்கள்) அமா்ந்து இரவு பாஸ்கா விருந்து உண்டு, அவா்களது பாதங்களைக் கழுவி முத்தமிட்டாா். இதை நினைவுகூரும் விதமாக புனித வெள்ளிக்கு முதல் நாளை புனித வியாழனாக கிறிஸ்தவா்கள் அனுசரித்து வருகின்றனா்.
இதன்படி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், 12 முதியவா்களின் பாதங்களை தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவினாா். மேலும், மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன.
இதில், பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவிப் பங்குத் தந்தை எஸ். அமா்தீப் மைக்கேல், திருத்தொண்டா் பி. பிரவீன், ஆயரின் செயலா் ஆரோக்கிய வினிட்டோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இப்பேராலயத்தில் புனித வெள்ளி வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.