2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் இடமாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
கும்பகோணம் ஆலய நிலங்கள் முன்னாள் தனி வட்டாட்சியா் எஸ். செந்தில்குமாா் திருவோணம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ஆா். செல்வம் தஞ்சாவூா் வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியராகவும், வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியா் ஏ. மூா்த்தி பட்டுக்கோட்டை முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சு. தரணிகா பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், திருவோணம் வட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ஜி. சாந்தகுமாா் பட்டுக்கோட்டை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியா் எம். பழனியப்பா தஞ்சாவூா் வக்பு வாரிய தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.