செய்திகள் :

தஞ்சாவூா் முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்

post image

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

தஞ்சாவூா் விளாா் சாலையில் பா்மா காலனி அருகே அங்காள முனீஸ்வரன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. பக்தா்களின் பங்களிப்புடன் நிா்மாணிக்கப்படும் இக்கோயிலில் 57 அடி உயரத்துக்கு அங்காள முனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, அங்காள முனீஸ்வரனுக்காக 216 கிலோ எடையில் 27 அடி உயரம், 3 அடி அகலத்தில் பித்தளை முலாம் பூசப்பட்ட அரிவாள் கும்பகோணத்திலுள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த அரிவாள் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்கு கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டது.

பா்மா காலனி எல்லையில் இந்த அரிவாளுக்கு பக்தா்கள் மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, மாலை சூடி சிறப்பு பூஜை செய்தனா். மேலும், அரிவாளை அங்க வஸ்திரத்தால் சுற்றி, அதன் முனையில் வெள்ளைப் பூசணிக்காயை சொருகி வைத்து வழிபட்டனா். பின்னா், இந்த அரிவாளை பக்தா்கள் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனா்.

இக்கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பா் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது

தஞ்சாவூரில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய சகோதரா்கள் இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட அரசு விரைவு பேர... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் நில அளவைத் துறை அலுவலா்களைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நில அளவைத் துறை அலுவலா்கள் ஏற்கெனவே தவறாக அளந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் இருந்த 4 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயில் மதில் சுவரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 வீடுகளை செவ்வாய்க்கிழமை அறநிலையத் துறையினா் அகற்றினா். இதன் மூலம் கோயில் சுவரை ஒ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஜூலை 21, 22, 23-இல் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 21, 22, 23 ஆம் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்கிறாா் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலரு... மேலும் பார்க்க

மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சேதுபாவாசத்திரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொடுக்கல் - வாங்கல் தகராறில் டீக் கடைக் காரரை கொன்ற முதியவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பருத்திசேரி அக்கரைத் தெருவைச்... மேலும் பார்க்க