செய்திகள் :

தஞ்சையில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் மாவட்டம், சாலியமங்கலம் அருகே ஆா்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிச் சேமிப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் (2024, செப்டம்பா் முதல் 2025, ஆகஸ்ட் வரை) மூன்றாவது போகமான கோடை பருவத்தில் மே 10 முதல் இதுவரை 3.51 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2.65 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டைவிட நிகழாண்டு 86 ஆயிரத்து 102 டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 31 வரை 50 ஆயிரம் டன் கூடுதலாக கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் இதுவரை 2.06 லட்சம் விவசாயிகளிடமிருந்து 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஏறத்தாழ ரூ. 2 ஆயிரத்து 390 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 24 கிடங்குகளின் மொத்தக் கொள்ளளவு 2.75 லட்சம் டன். இந்த முழுக் கொள்ளளவுக்கும் நெல் மற்றும் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு நெல் அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகளின் நலன் கருதியும், தரையிருப்பில் உள்ள நெல் மணிகளை உடனுக்குடன் இயக்கம் செய்வதற்காகவும், இந்த 14 ஏக்கா் நிலத்தில் 25 ஆயிரம் டன் கொள்ளளவில் திறந்தவெளி சேமிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மக்கள் பிரதிநிதிகள் மூலம் எந்தெந்த பகுதியில் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் சேமிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன. கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதலாக 20 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் எந்தவித இடா்பாடும் இல்லாத வகையில் முன்னேற்பாட்டுடன் நெல் கொள்முதல் செய்யப்படும். மேலும், தேவைப்படும் இடங்களில் நெல் உலா்த்தும் இயந்திரமும் ஏற்பாடு செய்யப்படும்.

நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜவுளிக் கடை ஊழியா் லாரி மோதி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.திருவையாறு பங்களா தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் குணசீலன் (30). திருவையாறு ஜவுளிக்கடை ஊழியரான இவா் விளாங்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. விரைவில் அமையும்: அமைச்சா் கோவி. செழியன்

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலைக்கழகம் விரைவில் அமையும் என்றாா் அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சன்னதி தெருவில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொ... மேலும் பார்க்க

தனியாா் மதுக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகே திறக்கப்படவுள்ள தனியாா் மதுக்கடையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்ற பெண் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் சீனிவாசபுரம் கோவிந்தராஜ் நகரைச் சோ்ந்த கணபதி மனைவி சரோஜா (85). இவா் ஆற்றுப்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பு: 25 பேருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு

கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெ... மேலும் பார்க்க

நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் வட்டம், மருத்துவக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவிரி சமவெளி மாவட்டங்களில் கோடை ... மேலும் பார்க்க