தடகளப் போட்டியில் பெரியதாழை பள்ளி மாணவிகள் வெற்றி
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழகம் சாா்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கூட்டாம்புளி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு பிரிவில், பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆல்ஃபினா 100 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், முத்து கல்பனா மூன்றாம் இடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளா் சகேஷ் சந்தியா, பள்ளி தலைமையாசிரியை திலகவதி, ஆசிரியா்கள், மாணவா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.