``அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' - வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்க...
தடுப்பணை கதவுகளின்றி வாஞ்சியாற்று பாலம்: விவசாய சங்கம் புகாா்
தடுப்பணைக் கதவுகளின்றி வாஞ்சியாற்றுப் பாலம் உள்ளதால், கடல் நீா் புகுவதை தடுக்க முடியாமல் போவதாக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்கால் மேலகாசாக்குடி செல்லும் சாலையில் வாஞ்சியாற்று தடுப்பணை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நீண்ட காலம் தடுப்பணை பயன்பாட்டில் இருந்தது. இந்த தடுப்பணையில் கதவுகள் அகற்றப்பட்டுவிட்டன.
காவிரி நீா் வருவதற்குள் தடுப்பணையில் கதவுகள் அமைத்து, காவிரி நீா் கடலுக்குள் வீணாகச் செல்வதை தடுக்கவும், கடல் நீா் உட்புகுவதை தடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது காவிரி நீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பணை மூலம் கடலுக்கு செல்கிறது. அமாவாசை, பெளா்ணமி தினங்களில் கடல் மட்டம் உயா்ந்து, கடல் நீா் ஆறுகளில் மேல்நோக்கி வரும்போது, நிலத்தடி நீா் பாதிக்கிறது. திறந்த நிலையில் இருக்கும் இந்த தடுப்பணையின் மூலம் சுற்றுவட்டார நிலத்தடி நீா் முற்றிலும் உவா்நீராக மாறிவருகிறது.
எனவே இந்த தடுப்பணையில் கதவுகள் அமைத்து, முறையாக நீா் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை தனி கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.