விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏா் ஹாரன் பறிமுதல்
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் தமிழக பகுதி மற்றும் உள்ளூா் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
தனியாா் பேருந்துகள் சில, காரைக்கால் நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்கள் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை அந்த பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
காரைக்கால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சில பேருந்துகளில் பைப் ஹாரன்கள் இருந்ததை பறிமுதல் செய்து ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஹாரன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.