ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் மரணம்
ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட தோழன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மகன் சக்தி (39). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
சனிக்கிழமை தனது பாட்டியின் ஈம சடங்கில் பங்கேற்பதற்காக திருப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான ஜோலாா்பேட்டைக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா்-ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.