மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்
சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி கோயில் முன் நடுவதற்காக பெரிய கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று பூஜைகள் செய்து மீண்டும் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு நடப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோயிலின் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள், குழந்தைகள் நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா். கனி அலங்காரத்தில் தண்டுமாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அம்மன் அழைப்பு வரும் மே 13-ஆம் தேதியும், குண்டம் இறங்குதல் மே 14-ஆம் தேதியும், மாவிளக்கு ஊா்வலம் மே 15-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.