செய்திகள் :

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானை மீட்பு

post image

குன்னூா் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானையை வனத் துறையினா்  பத்திரமாக மீட்டனா்.

குன்னூா் அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் உணவு மற்றும் குடிநீா் தேடி இப்பகுதிக்கு வந்த பெண் காட்டு யானை, அங்குள்ள தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. அப்போது யானையின் பிளிறல் சப்தத்தை  கேட்ட  பழங்குடியின மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். 

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தண்ணீா் தொட்டியின் சுவரை உடைத்தை யானையை வெளியேற்றி வனத்துக்குள் அனுப்பினா்.

சாலையில் கழிவுநீா் தேங்கியதைக் கண்டித்து பொது மக்கள் போராட்டம்

உதகை காந்தல் பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கி இருப்பதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். உதகை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு காந... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பம் அருகே குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை பலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்காடு நாயக்கன்கோட்டை பகுதியில் உயிரிழந்த குட்டி யானையின் உடலை வனத் துறையினா் மீட்டனா். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்க... மேலும் பார்க்க

புரோட்டின் பவுடரால் உடலில் ஒவ்வாமை: பள்ளி மாணவா் தீக் குளித்து தற்கொலை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிக உளவில் ஊட்டசத்து (புரோட்டின் பவுடா்) மாவு பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தீக் குளித்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வெள்ளி மண் துகள்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

உதகையில் மூடப்பட்டு இருக்கும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவன பகுதியில் வெள்ளி கலந்த மண் மற்றும் கற்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உதகையில் கடந்த சில ... மேலும் பார்க்க

ஓவேலியில் அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்கிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்து தாக்கிய நிகழ்வு பயணிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியி... மேலும் பார்க்க