செய்திகள் :

தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்தில் பரபரப்பு!

post image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள பூசாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47). கூழித்தொழில் செய்து வந்தார். இவருக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார். ஆகாஷ் கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணத்தினால் மனைவி ஜெயந்தி பிரிந்து சேலத்தில் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து பழனிசாமி இரண்டாவதாக ஜெயலட்சுமி (38) என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் தனது முதல் கணவரின் 18 வயது மகளுடன், பழனிசாமி மற்றும் அவரது மகன் ஆகாஷ், நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பழனிசாமி, ஜெயலட்சுமி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் பழனிசாமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பழனிசாமியின் உறவினர்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீசார், பழனிசாமியின் மகன் ஆகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை பழனிசாமி மற்றும் சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் கடந்த 15 ஆம் தேதி இரவு தலையை துண்டித்து படுகொலை செய்து உடல் பாகங்களை மூன்று சாக்கு மூட்டைகளில் கட்டி இரண்டு ஏரிகளில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, ஏரிகளில் கிடந்த உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆகாஷ்

இதனைத் தொடர்ந்து ஆகாஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜெயலட்சுமியை, தந்தை பழனிசாமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது மகளையும் அழைத்து வந்துள்ளார். தற்போது 18 வயதாகும் அந்த இளம் பெண்ணிடம் அவ்வப்போது தந்தை பழனிசாமி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். மகள் போன்றவள் என்று எண்ணாமல் அவர் தவறாக நடக்கும் நிலையில் அதற்கு மனைவி ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த ஆகாஷ் கோபம் கொண்டு தனது தந்தை பழனிசாமி, சித்தி ஜெயலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஆகாசை மிரட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த ஆகாஷ் கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் தந்தை மற்றும் சித்தியை அறுத்து கொலை செய்து மூட்டையில் கட்டி ஏரியில் வீசியது தெரிய வந்தது. இக்கொலை சம்பவம் நடைபெறும் போது ஜெயலட்சுமியின் 18 வயது மகளும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பென்னையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

UP வரதட்சணை கொடுமை: "அம்மா மீது தீ வைத்தனர்" - குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிர்ஷா என்ற இடத்தில் வசிப்பவர் விபின். இவரது மனைவி நிக்கி. இவர்களுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரையும்... மேலும் பார்க்க

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க