தனிப்பிரிவு காவலா்கள் இருவா் கௌரவிப்பு
சிறப்பாகப் பணியாற்றிய தனிப்பிரிவு முதல்நிலை காவலா்கள் இருவரை கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தாா்.
கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களிடம் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினாா்.
அப்போது, கடலூா் மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு மெச்சத்தகுந்த பணிபுரிந்த நெய்வேலி நகா் தனிப்பிரிவு முதல்நிலை காவலா் செந்தில்குமாா், திட்டக்குடி தனிப்பிரிவு முதல்நிலை காவலா் சுதாகா் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி, அவா்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தாா்.