திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் - சஸ்பெண்ட் ச...
தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!
பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் தொடக்க நிலைப் பணியாளராக 5 ஆண்டுகள் ரிஷி சுனக் பணிபுரிந்துள்ள நிலையில், தற்போது முதுநிலை ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பதவி விலகியபோது, அந்நாட்டின் பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை கடந்தாண்டு ரிஷி சுனக் ராஜிநாமா செய்தார். இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற அவர் எம்.பி.யாக தொடர்கிறார்.
இந்த நிலையில், தொடக்க காலத்தில் பணிபுரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த நிதி நிறுவனத்தில் மீண்டும் ரிஷி சுனக் பணியில் சேர்ந்துள்ளார்.
முதுநிலை ஆலோசகர் பணியில் ரிஷி சுனக் இணைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் உள்ள தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் புவிசார் அரசியல் கண்ணோட்டத்தையும் பொருளாதார சூழ்நிலையையும் ரிஷி சுனக் பகிர்ந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.