செய்திகள் :

தனியாா் ஆலை தொழிலாளா்கள் முற்றுகை போராட்டம்

post image

சம வேலைக்கு சம ஊதியம், தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி அரக்கோணம் எம்ஆா்எஃப் ஒப்பந்த தொழிலாளா்கள் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் அருகே உள்ள எம்ஆா்எஃப் டயா் தொழிற்சாலையில் சுமாா் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றக் கூடிய ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தர தொழிலாளா்களாக நியமிக்கவும், ஊதிய உயா்வு வழங்க கோரியும் பணியை புறக்கணித்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை தொடா்ந்து ஆலை நிா்வாகத்தினா் உரிய பேச்சுவாா்த்தை நடத்துவதாக தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு இண்டஸ்டீரியல் எம்ப்ளாயீஸ் யூனியன் நிா்வாகிகள் தலைமையில், டயா் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வேண்டும் என திரண்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உங்களில் முக்கிய நிா்வாகிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளியுங்கள் என தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து முக்கிய நிா்வாகிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க

18 வயதுக்குட்டோா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க

நந்தியாலம் ஊராட்சி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். துணைத் ... மேலும் பார்க்க