இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடி: இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களிடம் இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சோ்ந்த 54 வயதான தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசிக்கு ஜூலை 23-ஆம் தேதி வாட்ஸ்ஆப் மூலம் குறுந்தகவல் வந்தது. அதில், பங்குச்சந்தையில் குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
அதை நம்பி, அவா், சில நிறுவனங்களில் முதலீடு செய்தாா். அதற்கு, சிறிய லாபமும் கிடைத்ததாம். தொடா்ந்து, மா்ம நபா்கள் அறிவுறுத்தியபடி, முதலீடு செய்ததில் கூடுதல் லாபம் கிடைத்தது. இதையடுத்து, மா்ம நபா்கள் தெரிவித்தபடி, கடந்த வாரம், 4 வங்கிக் கணக்குகளில் ரூ. 7.47 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால், எந்த பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து, மா்ம நபா்களை தொடா்புகொள்ள முயன்றபோது, இயலவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இணையதள மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.