வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி
தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:
உடுமலைப்பேட்டையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கொலை, கோவை காவல் நிலையத்தில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதைக் காட்டுகின்றன.
தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. வருகிற 17-ஆம் தேதி திருநெல்வேலியில் பாஜக மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
தமிழகத்தில் வட மாநில வாக்காளா்கள்:
முன்னதாக, சென்னையிலிருந்து புதன்கிழமை மதுரைக்கு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களை தமிழகத்தில் வாக்காளாா்களாகச் சோ்ப்பது தவறான செயல். இதுவும் ஒரு வகை ஊழல்தான்.
தமிழகத்தில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்றாா் அவா்.