செய்திகள் :

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

post image

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.

மேலும் அரசு நிலங்களில், நிரந்தரமாக புதிய கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு அரசு அலுவலர்கள் இனி அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டு, 12 வாரங்கள் கெடு முடிவடைந்த போதிலும், பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன.

இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் எனவும், எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்புக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மீதான விசாரணை இன்று(ஆக. 25) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், “அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமையுள்ள நிலையில், அடையாளங்களை பொது வெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது அதன் நோக்கத்தையே சீர்குலைத்து விடும்” என்று தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

The Supreme Court has ordered an interim stay on the removal of flagpoles of political parties in public places in Tamil Nadu.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். உங்களுட... மேலும் பார்க்க

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கின்போது விஜய்யை சந்திக்கச் சென்ற இளைஞரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான விடியோ குறித்து அந்த இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மா... மேலும் பார்க்க

நீங்கா நினைவில் வாழும் அண்ணன்... விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து!

மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 25) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ. 5.10 கோடி செலவில் முழு அளவில்... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில், ஆம்புலன்ஸை தடுத்து அதில் இருந்த ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொது... மேலும் பார்க்க