விவசாயிகளின் கோரிக்கைக்கு நீதிமன்ற கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: உச்சநீதிமன...
தமிழகத்தில் ரூ.40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பு!
தமிழகத்தில் ரூ. 40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(டிச. 18) திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழகமெங்கும் 29 திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையங்களில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ரூ.30.17 கோடியிலும் 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் செயல்படும் வகையில் ரூ.10 கோடியிலும் நவீன தயாரிப்பு தொழில்நுட்ப மையங்களை கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று திறந்து வைத்தோம்.
மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பாக பயிற்சி வழங்கிய பயிற்றுநர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன’ எனக் குறிபிட்டுள்ளார்.
மேலும், “தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை நிறைவேற்றவும் அவர்களை தொழில்முனைவோராக உயர்த்திடவும் அயராது உழைப்போம்” எனக் கூறியுள்ளார்.