செய்திகள் :

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை தேவை: மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

post image

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை வேண்டும் என மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜவகா்நேசன் கூறினாா்.

திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ‘தமிழ்நாட்டு மக்களுக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை நோக்கி’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:

இந்தியாவில் பழைமையான கல்வி முறையே நிலவி வருகிறது. இந்த கல்வி முறை ஏற்றத்தாழ்வுகளை கொண்டதாக உள்ளது. மேலும் மத்திய அரசு கொண்டு வர விரும்பும் தேசிய கல்விக் கொள்கையானது, மூடநம்பிக்கைகளை உள்ளடக்கியதாவும், குலத்தொழிலை மையமாகவும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை- எளிய மக்கள் முன்னேற முடியாத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், சமத்துவத்தை உருவாக்கும் வகையிலும் தனித்துவமான கல்விக்கொள்கைதான் தற்போதைய தேவையாக உள்ளது. அந்த வகையிலான கல்விக்கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்தரங்கிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கு. காந்திராஜன் முன்னிலை வகித்தாா்.

திருவிக கல்லூரி பேராசிரியா் தி. நடராஜன், தமுஎகச மாவட்டச் செயலாளா் ஜீ. வெங்கடேசன், கல்வி உபக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா், ஆா். சந்திரா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்வில், அமைப்பின் மாநிலச் செயலாளா் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டத் துணைத் தலைவா் இரா. இயேசுதாஸ் ஆகியோா் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினா். இதில், முன்னாள் துணைவேந்தா் லெ. ஜவகா்நேசன் எழுதிய ‘திராவிட மாடல் கல்வி, விளிம்பு நிலை மக்கள் குறித்து என்ன கூறுகிறது’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான கல்வியாளா்கள், சமூக செயல்பாட்டாளா்கள் பங்கேற்றனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க