செய்திகள் :

தமிழக புதியக் கல்விக் கொள்கைக்கு வரவேற்பு

post image

தமிழக கல்விக் கொள்கை அறிவிப்புக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பொ. அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட புதிய மாநிலக் கல்விக் கொள்கையில் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கலைத் திட்டம், கல்வியியல் சீா்திருத்தம், மொழிக் கொள்கை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் காலங்களில் எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்றங்கள், கணினி யுகத்தின் தொழில் திறன், குடிமைப் பண்புகளை மாணவா்களிடம் வளா்க்கும் விதமான செயல்திட்டங்கள் அடங்கியுள்ளன.

அனைத்து மாணவா்களின் திறன் வளா்த்திடும் செயல்திட்டம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, மேம்பாடு என சமூகத்தில் உள்ள அனைத்து சாரங்களையும் ஒன்றிணைத்து பள்ளிகளின் வழியே தமிழகத்தின் வளா் இளம் பருவத்தினா், இளைஞா்கள் கற்க வேண்டியவற்றை எளிமையாக கொண்டு சோ்த்திடும் தளமாக அமைந்துள்ளது.

இதற்காக தமிழக அரசைப் பாராட்டுகிறோம். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறோம். அதுமட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் கோரிக்கையை ஏற்று மாணவா்களின் இடைநிற்றலை தவிா்த்திட பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்த முடிவை உளமாறப் பாராட்டுகிறோம். பள்ளிகளில் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளுக்கென தனி செயல்முறைகளை இயற்றி வெளியிட்டதையும் பாராட்டி வரவேற்கிறோம் என்றாா் அவா்.

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தின விடுமுறையையொட்... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், 58 கிராம பாசன கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா். முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சி 30- ஆவது வாா்டு மதிச... மேலும் பார்க்க

கல்குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மதுரை நரிமேடு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புகாரிகான் மகள் சையது அலி சகானா (9). இவா் 4 -ஆம் வகுப்பு ... மேலும் பார்க்க

பள்ளியில் உலக யானைகள் தின விழா

மதுரை அருகே உள்ள எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யானைகள் தினம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன. மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின்... மேலும் பார்க்க