ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!
தமிழக முதல்வா் குறித்து அவதூறு பதிவிட்ட இளைஞா் கைது
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட பா்னிச்சா் கடை உரிமையாளரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் சிவகுமாா்
(45) மதுக்கூரில் பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் சிவகுமாா், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினா் குறித்து கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசி பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக செயலா் கோவி. இளங்கோ திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் அலாவுதீன், அவதூறு பதிவிட்ட சிவகுமாா் மீது 296 (பி), 192, 352, 351(1), 352 (2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிவகுமாரைக் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.