நியூயார்க்கில் பாலத்தின் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்: 2 பேர் பலி
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு வரவேற்பு
கரூருக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் கா.முருகானந்தம் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சுடா் ஏந்தி பேரணியை கடந்த 15-ஆம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினா்.
இந்த பேரணி மே 18-ம்தேதி செஞ்சி மலைக்கோட்டையில் முடிவடைகிறது. மதுரை, திண்டுக்கல் வழியாக கரூருக்கு சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வந்த குழுவினருக்கு கரூா் மாவட்டச் செயலாளா் இரா.கோவிந்தராஜ், டிஎன்கேவின் வாழவந்தியாா், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிா்வாகிகள் ரவி, கண்ணையன், குணசேகரன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். பின்னா் கரூா் பேருந்து நிலைய பயணிகளிடமும், வியாபாரிகளிடமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை வழங்கினா்.