செய்திகள் :

தமிழில் பெயா் பலகை: தென்காசியில் கலந்தாய்வுக் கூட்டம்

post image

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன், தொழிலாளா் துணை ஆய்வாளா் க.வி.சு. விசுவநாதன் முன்னிலை வகித்தனா்.

வணிகா் சங்க பொறுப்பாளா்கள், தொழிலாளா் நல வாரிய பிரதிநிதிகள், தொழிலாளா் உதவி ஆய்வாளா், தென்காசி சரகம்-1 மெஹ்தா ஃபாஸ்லின், நகராட்சி சுகாதார பிரிவு அலுவலா் முகமது இஸ்மாயில், ஆய்வாளா்கள் கணேசன், மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழில் பெயா் பலகை எவ்வாறு அமைய வேண்டும், அதற்கான விதிகள் குறித்து திருநெல்வேலி தொழிலாளா் துணை ஆய்வாளா் விரிவாக எடுத்துரைத்தாா்.

வா்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் தமிழில் பெரிய அளவில் பெயா் பலகையை உடனடியாக அனைவரும் தாமாக முன்வந்து வைப்பதுடன், தமிழை வளா்க்க இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என நகா்மன்றத்தலைவா் சாதிா் வா்த்தக நிறுவன உரிமையாளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

வீ.கே.புதூா்: சூறைக் காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன! 18 மணி நேரம் மின்தடை

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் சூறைக் காற்றால் மின்வயா்கள் அறுந்ததில் 18 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. வீரகேரளம்புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று வீசியது. இதில் கல... மேலும் பார்க்க

பால் பண்ணை, கோழி பண்ணை அமைக்க, டிராக்டா் வாங்க விவசாயிகளுக்கு கடன்!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழு கடன் மற்றும் மத்திய கால கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மே 15முதல் 17வரை நடைபெறுகிறது. தென்காசி மண்ட... மேலும் பார்க்க

தென்காசியில் மே13-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்

தென்காசியில் இம்மாதம் 13ஆம் தேதி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் பூப்பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதியுலா

தென்காசி மாவட்டம் சங்கரநாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு சுவாமி-அம்பாள் பூப்பல்லக்கில் வீதியுலா வருதல் நடைபெற்றது. கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவ... மேலும் பார்க்க

இடைகாலில் அண்ணா தொழிற்சங்க பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின விழா பொதுக்கூட்டம் இடைகாலில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட ... மேலும் பார்க்க

மேலநீலிதநல்லூா் கல்லூரியில் முப்பெரும் விழா

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலித நல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறை பசும்பொன் பைந்தமிழ் மன்றம் சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆய்வ... மேலும் பார்க்க