செய்திகள் :

தமிழ்நாடு: `ஐ.பி.எஸ் அதிகாரி'களான 26 எஸ்.பி-க்கள் - நியமன உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு!

post image

தமிழக காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள் எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து, கடந்த 2001-ம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்க தகுதியான 26 எஸ்.பி-க்களின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அது தொடர்பாக இன்று டெல்லியில் மீட்டிங் நடந்தது. அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு டி.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்து தற்போது எஸ்.பி-யாகப் பணியாற்றும் மணி, செல்வக்குமார், 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சுதாகர், ராஜராஜன், சக்திவேல், செந்தில்குமார், முத்தரசி, விமலா, நாகஜோதி, ராமகிருஷ்ணன், பெரோஷ்கான் அப்துல்லா ஆகிய 9 பேருக்கும் 2003-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரிகளான சுரேஷ்குமார், பாஸ்கர், சண்முகபிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, உமையாள், சுந்தரவடிவேல், சரவணன், செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, செல்வராஜ், ராஜன் ஆகியோருக்கும்... 2005-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரியான ஸ்டாலின் என மொத்தம் 26 பேருக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

police

இதற்கான ஆர்டர் விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக ஐ.பி.எஸ் அந்தஸ்த்தை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக காவல்துறையின் குரூப் ஒன் ஆபீஸர்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகளாகியுள்ளனர். அதே நேரத்தில் பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கிய எஸ்.பி ஒருவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

ஐ.பி.எஸ் அந்தஸ்து பெற்ற காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``சீனியாரிட்டி அடிப்படையில் நேரடி டி.எஸ்.பி-க்களாக பணிக்குச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஐ.பி.எஸ் அந்தஸ்தை வழங்கும். ஆனால் சில ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதில் தகுதியான இரண்டு எஸ்.பி-க்களில் ஒருவர் காவல் பணியிலிருந்து விலகி விட்டார். இன்னொருவர், ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைக்காமல் எஸ்.பி-யாகவே ஓய்வு பெற்றுவிட்டார். இது குறித்து தமிழக அரசிடம் தகுதியான எஸ்.பி-க்கள் கோரிக்கை வைத்தோம். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டது. அதனால்தான் தமிழகத்தில் 26 எஸ்.பி-க்களுக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைத்திருக்கிறது" என்றனர்.

தூத்துக்குடி: T.சவேரியார்புரத்தில் தேங்கும் குப்பைகள்... சுகாதார பாதிப்புகளைத் தடுக்குமா மாநகராட்சி?

தூத்துக்குடி மாவட்டம், T. சவேரியார்புரம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைந்திருக்கிறது. அதன் பின்புறம் பிரதான சாலைக்கு அருகே குடியிருப்புகளையொட்டி ஆங்காங்கே குவிந்து கிடைக்கும் குப்பைகளால் அந்த இ... மேலும் பார்க்க

CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' - தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி 'நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருத... மேலும் பார்க்க

Trump: ``இந்தியா அதிக வரி விதிக்கிறது; நாங்களும் அப்படிச் செய்தால்..." - இந்தியாவை சாடிய டிரம்ப்!

வரும் ஜனவரி மாதம், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவரிடம் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க

Pan 2.0 - `பழைய பான் கார்டை கட்டாயமாக மாற்ற அவசியமில்லை' - என்ன சொல்கிறது அரசு?!

ஒரு திட்டம் புதியதாக வந்தால், உடனே அது சம்பந்தமான மோசடியும் முளைத்து விடுவது லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது. பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள், அத... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்த விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்; முகாமிடும் சமூக விரோதிகள்- சீரமைக்க கோரும் மக்கள்

திருப்பத்தூர் அடுத்த மடவாளத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்குமேல் ஆகிறத... மேலும் பார்க்க

திருவொற்றியூர்: அம்மா உணவகத்துக்கு சீல்; போராட்டத்தில் இறங்கிய அதிமுக-வினர்! - என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த அம்மா உணவகக் கட்டடம், கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.ச... மேலும் பார்க்க